யாழ் பலாலி விமான நிலையத்திற்கு முன்பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா

16th October 2017

மைலடி மீனவர் கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் ராஜேந்திர பிரஷாத் அவர்களினால் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சிக்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய மைலடியைச் சேர்ந்த முன்பள்ளி மாணவர்களுக்கு பலாலி விமான நிலையத்தை பார்வையிடுவதற்கு (13) ஆம் திகதி வெள்ளிக் கிழமை சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விமான நிலையத்தை பார்வையிடுவதற்கு 26 முன்பள்ளி மாணவர்கள், இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 30 பெற்றோர்கள் வந்திருந்தனர். இவர்களை இராணுவத்தினர் வரவேற்றனர்.

|