சிறுவர்களுக்கு 66 ஆவது படைப் பிரிவினால் புத்தகங்கள் விநியோகம்

16th October 2017

661 ஆவது படைத் தலைமையக நுாலகத்திற்கு ரஜரட பல்கலைக்கழகத்தினால் கிடைக்கப் பெற்ற புத்தகங்களை 66 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் துமிந்த கெபிடிவலானவின் ஏற்பாட்டில் பூனானை பாடசாலை மாணவர்களுக்கு இந்த புத்தகங்கள் வழங்கப்பட்டன.

சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் இந்த பாடசாலை பிள்ளைகளுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டன இந் நிகழ்வு 661 ஆவது படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் 13 ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம்பெற்றது.

இந் நிகழ்விற்கு மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிடிவலான , டொக்டர் இளங்கரத்ன , இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றுக் கொண்டனர்.

|