இலங்கை சந்தைப்படுத்தல் 2020 ஆம் ஆண்டு கல்வி நிலையத்தின் வருடாந்த நிகழ்வு

26th July 2019

இலங்கை சந்தைப்படுத்தல் கல்வி நிலையத்தின் ‘IGNITE – 2020 வருடாந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டின்னட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் வருகை தந்து அங்கு தேசிய பாதுகாப்பிற்கான பொருளாதாரத்தின் பங்களிப்பு தேசிய பாதுகாப்பு மற்றும் எதிர்கால பாதுகாப்பு எனும் தலைப்புகளை உள்ளடக்கி தமது உரையை நிகழ்த்தினார். இந்த நிகழ்வானது இன்று காலை 26 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் இடம் பெற்றதோடு இதன் போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சந்தைப்படுத்துபவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இராணுவ தளபதி அவர்கள் தமது உரையின் போது பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு செயற்பாடு தொடர்பான விடயங்களை உள்ளடக்கினார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் தேசிய பாதுகாப்பு மற்றும் அவற்றிற்கான சவால்களை எதிர்கொள்கின்ற முறைகள் தொடர்பாகவும்,. நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டின் சமூகத்தின் பங்களிப்பு மேலும் பொருளாதாரத்திற்கான செயற்பாடு தொடர்பாகவும் விபரித்தார்.

இந் நிகழ்விற்கு வருகை தந்த இராணுவத் தளபதியவர்கள் இலங்கை சந்தைப்படுத்தல் கல்வி நிலையத்தின் பணிப்பாளரான திரு சாரக பெரேரா அவர்களால் வரவேற்கப்பட்டார்.

இறுதியாக இந் நிகழ்வில் இராணுவத் தளபதியவர்களுக்கு இலங்கை சந்தைப்படுத்தல் கல்வி நிலையத்தின திரு சுரன்ஜித் சுவாரிஸ் அவர்களால் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டதோடு தளபதியவர்களும் இவருக்கு நினைவுச் சின்னத்தை வழங்கி வைத்தார். |