பொறிமுறை காலாட்படையணியில் அலங்கார அறைகள் நிர்மானிப்பு
14th October 2017
மெனிக்தபாமில் அமைந்துள்ள இராணுவ பொறிமுறை காலாட் படையணியின் பயிற்சி தலைமையகத்தில் அதிக வசதிகளுடன் இரண்டு அலங்கார அறைகள் நிர்மானிக்கப்பட்டுள்ளன. அந்த அறைகளினுள் பொறிமுறை காலாட் படையணிக்கு உரிய நவீன இயந்திர உபகரணங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த கட்டிடங்களை பொறிமுறை காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க அவர்களினால் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்விற்கு பொறிமுறை காலாட் படையணியின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளான பிரிகேடியர் எச்.எம்.எஸ் ஹேரத், கேர்ணல் எச்.எம்.யூ ஹேரத் மற்றும் லெப்டினன்ட் கேர்ணல் ஜி.பி.பி குலதிலக அவர்கள் கலந்து கொண்டனர்.
|