ஜிம்னாஸ்டிக் போட்டியில் இராணுவ சிங்க அணிக்கு வெற்றி

12th October 2017

படையணிகளுக்கு இடையிலான 2017 ஆம் ஆண்டு ஜிம்னாஸ்டிக் இறுதி சுற்றுப் போட்டிகள் (12) ஆம் திகதி கொழும்பு சுகததாஸ உள்ளரங்கில் இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ பொது நிதி மேலாண்மை பணிப்பாளர் மேஜர் ஜெனரல் வஜீர பலிககார அவர்கள் இராணுவ ஜிம்னாஸ்டிக் சங்கத்தின் அழைப்பையேற்று வருகை தந்தார்.

இந்த போட்டிகள் ஓக்டோபர் மாதம் 11, 12 ஆம் திகதிகளில் இராணுவத்திலுள்ள 11 படையணிகளின் பங்கேற்புடன் இடம்பெற்றது. இறுதி நாள் போட்டியின் போது இராணுவ நடன நிகழ்வு இடம்பெற்றது. அதனை தொடர்ந்து வெற்றியாளர்களுக்கு பிரதம அதிதியினால் சான்றிதல் மற்றும் வெற்றிக் கிண்ணங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. மேலும் இந்தப் போட்டியில் இராணுவ சிங்க அணி முதலாவது இடத்தையும் இராணுவ பொறியியலாளர் படையணி இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது.

இந் நிகழ்விற்கு இராணுவ விளையாட்டு கட்டுப்பாட்டு சபையின் பிரதானியான மேஜர் ஜெனரல் ரோஹன பண்டார, இராணுவ விளையாட்டு பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் அநுர சுதசிங்க மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர.

|