ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் விக்ரமநாயக காலமானார்

12th October 2017

இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் விக்ரமநாயக அவர்கள் அவுஸ்திரேலியாவில் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி காலமானார். இவரது பூதவுடல் இராணுவ பூரண மரியாதையுடன் பொறளை பொது மயானத்தில் (11) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

இந்த மரணச் சடங்கு நிகழ்வில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரால் மகேஷ் சேனாநாயக, ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த காலஞ் சென்ற அதிகாரிக்கு இராணுவ பீரங்கிப் படையினரால் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் பீரங்கிப் படையணிக்கு சொந்தமான (கண்கெரியல்) வண்டியில் வைத்து இவரது பூதவுடல் மயானத்திற்கு கொண்டு வரப்பட்டன.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் இராணுவ நிறைவேற்று பிரதானி மற்றும் பீரங்கிப் படையணியின் படைத் தளபதியின் மேற்பார்வையில் இடம்பெற்றது.

|