தியதலாவை பிரதேசத்தில் சிரமதான பணிகள்

11th October 2017

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் 68 ஆவது இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு தியதலாவை நகரம், வயி சந்தி , ஹப்புதல – பண்டாரவெல பிரதான பாதைகளில் சிரமதான பணிகள் (9) ஆம் திகதி திங்கட் கிழமை இடம்பெற்றன.

இவ் வீதிகளின் இரு பக்கங்களிலும் உள்ள குப்பைகள் மற்றும் கழிவுகளை இந்த சிரமதான பணிகளின் போது அகற்றி துப்பரவு செய்தனர்.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களின் பணிப்புரைக்கமைய 150 இராணுவத்தினரின் பங்கேற்புடன் இந்த சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் இந்த சிரமதான பணிகளுக்கு தியதலாவை பிரதேச செயலகத்தின் ஊழியர்கள், பண்டாரவலை வீதி அவிவிருத்தி அதிகார சபை, தியதலாவை புகையிரத ஊழியர்கள், மற்றும் சிவிலியன்கள் இந்த பணிகளில் இணைந்திருந்தனர்.

|