இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு சிடிஎஸ் அம்பாறை முகாமில் மரநடுகை மற்றும் நலன்புரி நிகழ்வுகள்
11th October 2017
இராணுவ தினத்தை முன்னிட்டு அம்பாறை இராணுவ பயிற்சி முகாமில் சேவையாற்றும் அனைத்து படையினரும் இணைந்து இந்த முகாம் வளாகத்தினுள் 300 மரக் கன்றுகளை நடுகையிட்டனர். இந் நிகழ்விற்கு இந்த பயிற்சி முகாமின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் பி.ஏ.டீ கஹபொல அவர்களும் கலந்து கொண்டார்.
அதனை தொடர்ந்து அம்பாறையில் உள்ள முதியோர் இல்லத்தைச் சேர்ந்த முதியோர் 40 பேருக்கு பகல் உணவுகள் இந்த பயிற்சி முகாமினால் ஒழுங்கு செய்து வழங்கப்பட்டன.
|