ஒட்டுசுட்டான் வைத்தியசாலை வளாகத்தில் 64 ஆவது படைப் பிரிவின் ஒத்துழைப்புடன் சிரமதான பணிகள்
11th October 2017
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 64 ஆவது படைப் பிரிவின் தலைமையில் 641, 642 படைத் தலைமையக படையினர் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களின் ஒத்துழைப்புடன் (6) ஆம் திகதி ஒட்டுசுட்டான் வைத்தியசாலை வளாகத்தில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சிரமதான பணிகளில் இராணுவ அதிகாரிகள் இருவர் உட்பட 75 படை வீரர்கள் மற்றும் 6 வைத்தியசாலை ஊழியர்கள் கலந்து கொண்டு நான்கு மணித்தியாலங்கள் இடம்பெற்றன.
சிறந்த நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் 64 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி பிரிகேடியர் ஜயநாத் ஜயவீரவின் தலைமையில் இந்த சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
|