26 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியினால் சிறுவர் தின நிகழ்வு
8th October 2017
யாழ் பாதுகாப்பு தலைமையகம், 522 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 26 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியினால் சிறுவர் குழந்தை தினத்தை முன்னிட்டு அரச கரம்பகம் கலவன் பாடசாலை மற்றும் விநாயகம் முன் பள்ளிக்கு பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன.
கரம்பகம் பாடசாலையிலின் 26 பிள்ளைகளுக்கும் விநாயகர் முன் பள்ளியிலிருந்து 20 பிள்ளைகளுக்கும் இந்த அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்விற்கு 522 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் கமல் பின்னவல, 26 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரி சுமித் கமகே , இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
|