டீ.எஸ் பழைய கல்லுாரி மாணவர் சங்கத்தினால் சிறுவர் தின நிகழ்வு அனுஷ்டிப்பு
3rd October 2017
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு டீ.எஸ் சேனாநாயக கல்லுாரியின் பழைய மாணவர் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வு 522 ஆவது படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் அச்சுவேலி சரஸ்வதி வித்தியாலயத்தில் (1) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது.
சரஸ்வதி வித்தியாலயத்திற்கு இந்த பழைய மாணவர் சங்கத்தினால் இப் பாடசாலை வர்ண பூச்சுகளுக்காக 60 லீட்டர் (பெயின்டின்), 10 மின்விசிரிகள், விளையாட்டு உபகரணங்கள், இசை உபகரணங்கள், 10 துவிச்சக்கர வண்டிகள், 5 கனனிகள் உள்ளடக்கப்பட்ட 1.7 மில்லியன் நிதி பெறுமதியான பொருட்கள் அன்பளிக்கப்பட்டன.
இந் நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி, 52 ஆவது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அனுர வன்னியாரச்சி, டீ. எஸ் சேனாநாயக கல்லுhரியின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் ஆர் .எம் ரத்னாயக , கோப்பாய் கல்வி பணிப்பாளர் என். சிவநேஷன், பாடசாலை அதிபர் முருகசோதி, பாடசாலை நிர்வாக அதிகாரிகள், ஆசிரியர்கள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வின் ஒழுங்கமைப்புக்கள் 522ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியின் மேற்பார்வையின் கீழ் சிவில் ஒருங்கினைப்பு அதிகாரியான மேஜர் சஜித் மான்னப்பெரும அவர்களினால் இடம்பெற்றது.
|