கந்துாபோத தியான பயிற்சிகள் பாதுகாப்பு படையினர்களுக்கு
3rd October 2017
இராணுவ தலைமையகத்தில் உள்ள உளவியல் நடவடிக்கை பணியகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த தியான பயிற்சிகள் கந்துபோத சையன் சர்வதேச விபசனா தியான மத்திய நிலையத்தில் 29 ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம் பெற்றது.
இத்தியானத்தில் 5 இராணுவ அதிகாரிகள் மற்றும் 70 படை வீரர்களும்,கடற் படையைச் சேர்ந்த 19 அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர். இந்த தியானங்கள் வண தியசென்புரா விமலா தேரர் மாலை வரை இந்த தியான அமர்வுகளை மேற்கொண்டார்.
இதற்கிடையில், கந்துபோத சையன் சர்வதேச விபசனா தியான மத்திய நிலையத்தில் மற்றொரு தியான நிகழ்வு புதன் கிழமை (04) ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டது.
இதே தினத்தில், இந்த தியான நிகழ்வில் இலங்கை இராணுவ அதிகாரிகள் 05பேரும் 83 இராணுவ படையினரும்,கடற்படை அதிகாரியொறுவரும் கடற்படையினர் 15பேரும், கலந்து கொண்டனர்.
|