மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக ஒத்துழைப்புடன் பல்வேறுபட்ட சிகிச்சைகள்

1st October 2017

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 121, 12 ஆவது படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் மொனராகலை பிரதேசத்தில் நடமாடும் வைத்திய சேவைகள் செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரை தனமல்வில ரத்ன தியான மையத்தில் இடம்பெற்றது.

கொழும்பு ரொட்டரி கழகம் மற்றும் கொழும்பு நட்புறவு சங்கம் இணைந்து ஒழுங்கு செய்யப்பட்ட இந்த நடமாடும் வைத்திய சேவையில் 46 செயற்கை மருந்துகள், 402 முக்கு கண்ணாடிகள் மற்றும் 96 குழந்தைகளுக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு மருத்துவ உபகரணங்கள் பொது மக்களுக்கு இலவசமாக இந்த சேவையின் ஊடாக வழங்கப்பட்டது.

இந்த மருத்துவ சேவையின் ஊடாக பயோமெக்கானிக்சிகளுக்கான மருத்துவ அதிகாரிகள் கண் தொற்று நோய்கள், நீரழிவு சிக்கல்கள், புரோஸ்டெடிக் உறுப்புக்கள் தொடர்பாக பரிசோதித்தனர். இந்த நடமாடும் சேவைக்காக 11 அமைப்பாளர்கள் புரோஸ்டெடிக் உறுப்புக்களை நன்கொடையாக வழங்கியிருந்தனர்.

ஆயிரத்துக்கு அதிகமான பொது மக்கள் இந்த வைத்திய சேவையின் போது பரிசீலனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டனர். 121 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் நலின் கொஸ்வத்த அவர்களது தலைமையில் 9 ஆவது சிங்கப் படையணியின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றது.

|