தமிழ் மொழி பாடநெறி சான்றிதல் வழங்கும் நிகழ்வு

29th September 2017

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழ் மொழி பயிற்சி பாடநெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு (27) ஆம் திகதி புதன் கிழமை கிளிநொச்சி நெலும்பியச கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவனவின் தலைமையில் ஆறுமாத காலமாக இந்த பயிற்சி நெறிகள் இடம்பெற்றன. 30 நாட்கள் இடம்பெறும் இந்த பயிற்சி நெறியில் கிளிநொச்சி படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் அனைத்து படைப் பிரிவுகள், படைத் தலைமையகங்கள் மற்றும் படையணியைச் சேர்ந்த படைவீரர்கள் பங்கு பற்றினர். இந்த பயிற்சி நெறிகள் மூன்று கட்டங்களாக நிகழ்த்தப்பட்டு 2373 இராணுவத்தினர் இந்த பயிற்சி நெறியை நிறைவு செய்திருந்தனர்.

இந்த் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன வருகை தந்து பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். மேலும் இந் நிகழ்விற்கு கிளிநொச்சி மாவட்ட செயலாளர் எஸ். அருமைநாயகம் ,மும்மத சமய குருமார்கள் , கல்வி வலய பணிப்பாளர்கள், படைத் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

|