232 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பதவியேற்பு
29th September 2017
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் தொப்பிகலையில் அமைந்துள்ள 232 ஆவது படைத் தலைமையகத்தின் புதிய கட்டளைத் தளபதியாக கேர்ணல் ரொஷான் ஜயமான்ன (27) ஆம் திகதி உத்தியோக பூர்வமாக தனது கடமையை பொறுப்பேற்றார்.
புதிய கட்டளை தளபதிக்கு படைத் தலைமையக நுழைவாயினில் வைத்து படையினரால் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தனது கடமை பொறுப்பேற்றும் நிகழ்வை நினைவு படுத்தி மரநடுகை நிகழ்வு கட்டளை தளபதியினால் இடம்பெற்றது. பின்பு படைத் தலைமையகத்தினுள் அனைத்து இராணுவ படையினரது பங்களிப்புடன் பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு படையணிகளின் கட்டளை அதிகாரிகள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் கலந்து கொண்டனர்.
|