இந்தியப் பிரதிநிதிகள் உயிர் நீத்த போர் வீரர்களுக்கு அஞ்சலி
26th September 2017
இந்திய விமானப் படையின் ஏயார் கொமாண்டோர் சுரேஷ் ஹொலனவர் உள்ளடங்களான இந்திய உயர் அதிகாரிகள் 15 பேர் இந்திய அமைதிகாக்கும் நடவடிக்கைகளின் போது மரணித்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் பததரமுல்லையில் அமைந்துள்ள இப் போர் வீரர்களின் நினைவுத் துாபிக்கு கடந்த திங்கட் கிழமை மாலை (25) விஜயம் செய்து அஞ்சலி செலுத்தினர்.
அந்த வகையில் இலங்கையில் கிட்டத் தட்ட ஆறு நாள் (செப்டெம்பர் 24 – 29) கல்வி விஜயத்தை மேற்கொண்ட இந்தியப் பிரதிநிதிகலால் இவ் ஆங்சலி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் 1980ஆம் ஆண்டு இலங்கையின் தீவிரவாதத்திற்கு எதிராக போரிட்டு உயிர் நீத்த இந்திய ஜீவன்ஸ் எனும் வீரரின் நினைவுத் துாபிக்கே இவ்வாறு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இந் நிகழ்விற்கு வருகை தந்த பிரதிநிதிகளை இராணுவ நிர்வாகப் பணிப்பகத்தின் கேர்ணல் அணில் இலங்ககோண் அவர்கள் வரவேற்றார்.
இந் நிகழ்வின் இராணுவ பொலிஸ் படையினர் , இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் இந்தியப் பிரதிநிதிகள் போன்றௌர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வின் இறுதியில் ஏயார் கொமாண்டோர் அவர்கள் விசேட அதிதிகள் புத்தகத்தில் கையொப்பமிட்டார்.
|