இராணுவப் படையினரால் இரத்ததான நிகழ்வு

25th September 2017

வல்வெட்டித் துரை விஜயபாகு காலாட் படையணியின் 1ஆவது படையணியினரால் இப் படையின் 29ஆவது ஆரம்ப நினைவாண்டை முன்னிட்டு யாழ்பாண போதான வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க கடந்த வியாழக் கிழமை (21) இப் படைத் தலைமையத்தில் இரத்ததானம் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வானது இப் படையணியின் கட்டளைத் தளபதியான லேப்டினன்ட் கேர்ணல் தம்மிக்க ஜயரத்தின அவர்களின் தலமையில் ஒழுங்கு செய்யப்பட்டு உயர் அதிகாரிகள் மற்றும் படை வீரர்களின் பங்களிப்போடு இடம் பெற்றது.

இதன் போது யாழ்பாண போதான வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவினரின் அதிகாரிகள் ஒத்துழைப்பை வழங்கியதோடு வடக்கு பாதுகாப்பு படைத் தலைமையத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியவர்கள் இந் நிகழ்விற்கான முழு ஒத்துழைப்பையூம் வழங்கினார்.

இந் நிகழ்வில் இப் படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதிய உள்ளடங்களாக 109இராணுவ படைவீரர்கள், இப் படையின் 5ஆவது, 16 (தொண்டர்) படையினர் மற்றும் இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் 22ஆவது படையணியின் படையினர் இரத்த தானத்தை வழங்கினர்.

|