சுவிஸ் துாதரக ஆய்வாளர்கள் முன்னாள் போராளிகள் தொடர்பாக ஆராய்வு
22nd September 2017
சுவிட்சர்லாந்தில் இடம்பெயர்வுக்கான அரச செயலகத்தில் நாட்டின் ஆய்வாளர் அன்ட்ரீஸ் ஷ்மிட் மற்றும் சுவிட்சர்லாந்தின் தூதரகத்தின் செயலாளர் திருமதி ஜீஸல ஸ்குலப் ஆகியோர் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியை (19) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சந்தித்தனர்.
இச் சந்திப்பின் போது முன்னாள் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்ட நிலைமைகள் தொடர்பாகவும் சமூக, பொருளாதார மற்றும் உளவியல் முனைகளில் அவர்களின் வெற்றிகள் மற்றும் சவால்கள் அடையாளம் காட்டுவது தொடர்பாகவும் தமது வாழ்வாதாரங்களின் தற்போதைய நடைமுறையில் உள்ள பிரச்சினைகளை தொடர்பாகவும் அவர்களது பொருளாதார மற்றும் சமூக காரணிகளை மேலும் முன்னேற்றுவதற்கு வேறு என்ன செய்ய வேண்டும் என்பதனையும் அவர்களது தேவைகளையும் இந்த கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டது.
இறுதியில் இந்த பகுப்பாய்வாளர்களினால் இவர்களுக்கு பாதுகாப்பு படையினரால் கிடைக்கப்பெற்ற ஒத்துழைப்பையிட்டு யாழ் தளபதிக்கு நன்றியை தெரிவித்தனர்.
|