கூட்டுப்படைப் பயிற்சியில் சோதனை மற்றும் கைப்பற்றும் நடவடிக்கைகள்
20th September 2017
தற்போது கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் கூட்டு நடவடிக்கை பயிற்சிகளின் ஒரு அங்கமாக சரதாபுர மற்றும் வெலிகந்த பிரதேசங்களில் கூட்டுப்படைப் பயிற்சிகள் பிரிவு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சோதனை நடவடிக்கை பயிற்சிகளை மேற்கொண்டனர்.
இப் பயிற்சியில் இலங்கை முப்படையினர் உட்பட 69 வெளிநாட்டு படை வீரர்கள் இணைந்துள்ளனர். இந்த கூட்டுப் பயிற்சியின் இறுதி நாள் நிகழ்வு (24) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மின்னேரியவில் இடம்பெறும்.
வெலிக்கந்தையில் இடம்பெற்ற பயிற்சியின்போது தாக்குதலில் ஈடுபட்டிருந்த படையினர் எதிரிகளின் தலைவர்களை உயிருடன் பிடித்து விமானப்படை வீரர்களின் ஒத்துழைப்புடன் செயல்பட்டு தலைமையகத்திற்கு அழைத்து சென்றனர்.
மேலும் நடவடிக்கை பயிற்சியின் போது கொமாண்டோ படையினர் மற்றும் எயார் மொபைல் படையணி இணைந்து விமானப்படையினரின் ஒத்துழைப்புடன் எதிரிகளின் வலயத்தை தாக்கும் நடவடிக்கைகளை மட்டக்களப்பில் மேற்கொண்டனர்.
இந்த பயிற்சி தொடர்பான அனுபவம் மற்றும் விளக்கங்களை பயில்வதற்காக இலங்கை இராணுவ எகடமி மற்றும் பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிநிலை கல்லுாரியின் பயிற்சியை மேற்கொள்ளும் இராணுவ அதிகாரிகள் இந்த பயிற்சிகளை பார்வையிடுவதற்கு கல்வி சுற்றுலாவை மின்னேரியாவிற்கு மேற்கொண்டனர்.
19 ஆம் திகதி இங்கு வருகை தந்த இராணுவ எகடமியின் கெடெற் உத்தியோகத்தர்கள் இப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு இராணுவத்தனருடன் தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
|