உளவியல் ரீதியான இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை

20th September 2017

இராணுவ உளவியல் பணியகத்தின் ஓழுங்கமைப்பில் அமெரிக்க துாதரக ஒத்துழைப்புடன் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலமையகத்தில் (19) ஆம் திகதி செவ்வாய்க கிழமை உளவியல் பயிற்சிப்பட்டறை கிளிநொச்சியில் இடம்பெற்றது.

அமெரிக்க இராணுவ பசிபிக் கட்டளை அதிகாரிகளாலும் இராணுவத்தின் மூத்த அதிகாரிகளாலும் நடத்தப்பட்டது. இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை கருத்தரங்கில் உளவியல் செயல்பாடு, தகவல் மேலாண்மை, உளவியல் நடவடிக்கைகளின் செயல்முறை, இலக்கு பார்வையாளர்களின் பகுப்பாய்வு, பிரச்சாரம் மற்றும் மறுபரிசீலனை ஆகியவற்றின் கட்டமைப்பு மற்றும் நோக்கங்களை மையமாக கொண்டிருந்தது.

இந்தப் பயிற்சிப்பட்டறைக்கு யாழ்ப்பாணம், வன்னி, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 43 அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த பயிற்சிப்பட்டறைகளை அமெரிக்க இராணுவ பசிபிக் கட்டளை அதிகாரி கெப்டன் கெல்லி ஜோன் மற்றும் பதவி நிலைச் சார்ஜன்ட் ஸ்டீவ் பார்டிசான் விரிவுரைகளை ஆற்றினார்கள்.

இந்த நிகழ்ச்சி பட்டறை இராணுவ உளவியல் பணிப்பாளர் பிரிகேடியர் யூ.ஏ.டி ஹென்னதிகே அவர்களின் மேற்பார்வையில் இடம்பெற்றது.

இந்தக் கருத்தரங்கு சில வாரங்களுக்கு முன்னர் இராணுவம் மற்றும் அமெரிக்கத் தூதரகம் ஆகியவற்றால் கூட்டாக ஒழுங்கமைக்கப்பட்டு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் பங்களாதேஷ், கம்போடியா, இந்தியா, இந்தோனேசியா, மங்கோலியா, நேபாளம், பிலிப்பைன்ஸ், இலங்கை மற்றும் மாலதீவு போன்ற நாடுகளின் 30 பிரதிநிதிகளின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்கள் இந்த கருத்தரங்கு தொடர்பாக தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

|