படையணிகளுக்கு இடையிலான பரா சைக்கிள் மற்றும் சக்கர நாற்காலி போட்டிகள் இரத்தினபுரியில்

16th September 2017

2017ஆம் ஆண்டிற்கான இராணுவ பரா சைக்கிள் மற்றும் சக்கர நாற்காலி மரதன் போட்டிகள் இரத்தினபுரி சிவலி மைதானத்தில் இன்று (15) ஆம் திகதி இடம்பெற்றது.

இந் நிகழ்வு கெமுனு ஹேவா படையணியின் பதவி நிலைப் பிரானியான மேஜர் தம்பத் பேணான்டோ அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு குருவிட பிரதேசத்தில் அமைந்துள்ள இப் படையணியினரின் ஒத்துழைப்புடன் இடம் பெற்றது.

இந்த பரா சைக்கிள் போட்டிகள் இரத்தினபுரி சிவலி மைதானத்திலிருந்து பெல்மடுல்ல மணிக்கூட்டு கோபுரத்தினை நோக்கி 53 கிமீ துார போட்டிகள் நடைபெற்றது.

சக்கர நாட்காலி போட்டிகள் மற்றும் மரதன் போட்டிகள் திருவான சந்தியிலிருந்து பரக்கடுவா ஊடாக சிவலி இரத்தினபுரி மைதானம் வரையான 23 கிமீ போட்டிகள் இடம்பெற்றது.

பரா சைக்கில் ஓட்டப் போட்டியில் சிங்கப் படையணி மற்றும் இலங்கை இலேசாயுத காலாட் படையணி வெற்றியீட்டியது.

இந் நிகழ்வில் சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக் கிண்ணங்களை கெமுனு ஹேவா படையணியின் தளபதியவர்கள் வழங்கினார்.

மேலும் இந் நிகழ்விற்கு இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.

|