இராணுவ விவசாயப் பணிப்பகத்தினால் பயனுள்ள தாவரங்கள் பகிர்ந்தளிப்பு
13th September 2017
இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் ஆலோசனைக்கமைவாக இராணுவ விவசாய மற்றும் கால்நடை பணியகத்தின் பயனுள்ள பெறுமதிமிக்க தாவரவியல் விதைகள் மற்றும் தாவரங்கள் பயிற்ச்சிகளை நிறைவு செய்த இராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டது.
அந்த வகையில் இலங்கையில் புதிதாக முன்னெடுக்கப்பட்ட ‘சுற்றுச் சூழல் முன்னோடிப் பசுமைத் திட்டம்’ எனும் தலைப்பின் கீழ் அமையும் இத் திட்டமானது இராணுவத்தினரிடையே மர நடுகையினை மேற்கொள்வதற்கான செயற்பாட்டை துாண்டும் நோக்கிலும் நாட்டிற்கு ஓர் பாரிய பொருளாதாரத்தை உருவாக்கக் கூடிய திட்டமாக அமைகின்றது.
அந்த வகையில் இராணுவ விவசாய மற்றும் கால்நடை பணிப்பகத்தால் மேற்கொள்ளப்பட்ட பயிற்சிப் பட்டறையை நிறைவு செய்த படை வீரர்களுக்கான சான்றிதழ்கள் , இப் பணியகத்தின் தளபதியான பிரகேடியர் புவனேக குணரத்தின அவர்களின் தலைமையில் வழங்கப்பட்டது.
அந்த வகையில் முன்னர் இப் பணியகத்தினால் 8,000 தாவரங்கள் ஹீனனிகல , தியத்தலாவை தம்புள்ளை மற்றும் பனாகொடை போன்ற இராணுவ பயிற்சிக் கல்லுாரிகளின் கிட்டத் தட்ட 786 இராணுவ பயிற்சிப் பயிலுனர்களுக்கு வழக்கப்பட்டது.
மேலும் இப் பணியகத்தினால் 37,500 ற்கும் மேற்பட்ட தாவரங்களான மா , பலா , தேக்கு , கஜீ கொய்யா , எலுமிச்சை , முருங்கை , கோப்பி , கறிவேப்பிலை , விழா , தோடை , டிரகண் புறுட் , ஆப்பில் போன்ற தாவரங்களை வழங்கினர்.
அந்த வகையில் இலங்கை இராணுவமானது 2010ஆம் ஆண்டு இராணுவ விவசாய மற்றும் கால்நடை பணியகத்திற்காக சில அபிவிருத்திப் பணிகளை இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் உதவியுடன் மேற்கொண்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து நொவெம்பர் மாதம் 2011ஆம் ஆண்டு , இராணுவ விவசாய மற்றும் கால்நடை பணியகமானது பலவாறான விவசாய செற்திட்டங்களை இராணுவப் படைவீரர்களுக்காக மேற்கொண்டது.
மேலும் இப் பணியகத்தினால் தற்போது 6 இராணுவ விவசாய பண்னைகள் நெல் , முட்டை , மரங்கரிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் செயற்பாடுகளில் மேற்கொள்கின்றது.
|