இராணுவ சமிக்ஞை பிரதானி கூட்டுப்படை பயிற்சியின் நெட்வேர்கை நேரடியாக பார்வை

8th September 2017

கிழக்கு மாகாணத்தில் நடைபெறவிருக்கும் கூட்டுப்படை நடவடிக்கை பயிற்சி நிலைய மத்திய நிலையத்திலுள்ள இணையதள நெட்வேக்கை பார்வையிடுவதற்கு இராணுவ பிரதான சமிக்ஞை பிரதானி மேஜர் ஜெனரல் அஜித் விஜேசிங்க அவர்கள் வியாழக் கிழமை (7)ஆம் திகதி மின்னேரிய இராணுவ முகாமிற்கு சென்றார்.

பிரதி கூட்டுப்படை பயிற்சிப் பணிப்பாளர், பிரிகேடியர் நிஷாந்த வருகை தந்த இராணுவ சமிக்ஞை பிரதானியை வரவேற்றார். அதன் பின்பு அங்குள்ள தகவல் தொடர்பாடல் மற்றும் நெட்வேக் தொடர்பாக சமிக்ஞை பிரதானி பார்வையிட்டு சில கருத்துக்களை தெரிவித்தார்.

மேலும் வெளிநாட்டு இராணுவ பிரதிநிதிகளின் பங்கேற்புடன் 2017ஆம் ஆண்டிற்கான கூட்டுப் படைப்பயிற்சி நடவடிக்கைகள் பொரவெவ மற்றும் திருக்கோணமலை குரங்கு பாஞ்சான் இராணுவ முகாமிற்கு அருகாமையிலுள்ள கொமாண்டோ மற்றும் விஷேட படையணி தலைமையகத்தில் (3)ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது.

|