நீர்கொழும்பு ரொட்டரி கழகத்தினால் கிளிநொச்சி வறிய பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு
7th September 2017
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒழுங்கமைப்பில் நீர்கொழும்பு ரொட்டரி கழகத்தினால் கிளிநொச்சி வறிய குடும்பத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் 80 பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் (5)ஆம் திகதி செவ்வாய்க் கிழமை கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் அமைந்துள்ள நெலும்பியச கேட்போர் கூடத்தில் வழங்கப்பட்டது.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன நீர்கொழும்பு ரொட்டரிக் கழகத்தின் அலுவலகர்களுடன் கலந்துரையாடி கிளிநொச்சி மாணவர்களின் நலன்புரி நிமித்தம் இந்த பணிகளை மேற்கொண்டார்.
மல்லாவி, விஸ்வமடு, பூநரின் போன்ற பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வறிய குடும்பத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி,ரொட்டரிக் கழகத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய பிதா பியூஸ் ஜோஜ், டொன் பொஸ்கோ,இராணுவ கட்டளை அதிகாரிகள் பெற்றோர்கள், பாடசாலை மாணவர்கள், இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
|