683ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி பதவியேற்பு
6th September 2017
683ஆவது படைத் தலைமையகத்தின் 7ஆவது கட்டளை அதிகாரியான கேர்ணல் டீ.பி ஜயசிங்க தனது பதவிக் கடமைகளை திங்கட் கிழமை (28)ஆம் திகதி பதவியேற்றார்.
அன்றைய தினம் கட்டளை அதிகாரிக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை 683ஆவது படைத் தலைமையகத்தினால் வழங்கப்பட்டது.
இவரது இந்த பதவியேற்பு நிகழ்வின் நிமித்தம் 683ஆவது பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை நிகழ்வு கட்டளை அதிகாரியினால் நிகழ்த்தப்பட்டது. இந் நிகழ்விற்கு இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
|