இராணுவத்தினரால் பாடசாலை நூலகத்திற்கு புத்தகங்கள் பகிர்ந்தளிப்பு
5th September 2017
முல்லைத்தீவு பிரதேசத்தில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே வாசிப்பு பழக்கம் மற்றும் கல்வி ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்குடன்,591 படைப்பிரிவின் தளபதி,கேணல் டபிள்யூ.எஸ்.பீ.நாயக்கரத்ன அவர்களின் வேண்டுகோளின் பேரில் வெள்ளிக்கிழமை 01 ஆம் திகதி முல்லைத்தீவு மகா வித்தியாலயம் நூலகத்திற்கு இப் பாட புத்தகங்கள் நன்கொடையாக வழங்கினார்கள்.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைதலைமையகத்தின் கீழ் இயங்கும் 591படைப்பிரிவினரால் இந்த நன்கொடை வழங்கப்பட்டது.
பாடசாலை சம்மந்தமான ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் புத்தகம் வாழ்க்கை வரலாறு, கதை புத்தகங்கள், பத்திரிகைகள், கடந்த காகித புத்தகங்கள், மற்றும் கல்வி புத்தகங்களும் இதில் அடங்கும்.
|