பாத யாத்திரிகளை இராணுவ தளபதி சந்திப்பு
9th July 2019
கதிர்காம திருவிழாவிற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து வரும் பாத யாத்திரிகளை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் இன்று (9) ஆம் திகதி ஜாலை தேசிய பூங்காவில் வைத்து சந்தித்தார்.
அச்சந்தர்ப்பத்தில் பாத யாத்திரைகள் நிமித்தம் வருகை தந்த பக்தர்களுடன் இராணுவ தளபதி உரையாடினார். பின்பு 12 ஆவது படைப் பிரிவின் அனுசரனையில் பாத யாத்திரிகளுக்கு சிற்றூண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த பணிகள் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிரி வடுகே அவர்களது வழிக் காட்டலின் கீழ் 12 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தீப்தி ஜயதிலக அவர்களது கண்காணிப்பின் கீழ் இடம்பெற்றன.
இந்த பாத யாத்திரிகள் 1,500 பேருடன் 5 கிலோ மீற்றர் தூரம் இராணுவ தளபதியும் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இச்சந்தர்ப்பத்தில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளும் இணைந்திருந்தனர். |