22 ஆவது படைப் பிரிவினால் அனர்த்த முகாமைத்துவ விழிப்புணர்வு

31st August 2017

திருகோணமலை மாவட்ட செயலக அலுவலகத்தில் கடந்த வெள்ளிக் கிழமை (25)ஆம் திகதி விஷேட விழிப்புணர்வு முப்படையினர்,பொலிஸார்,கடலோர படையினர்கள் மற்றும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வுகள் கடந்த (25) வெள்ளிக் கிழமை இடம்பெற்றது.

பேரழிவு மேலாண்மை மற்றும் அவசர நடவடிக்கைகளில் பங்கேற்பாளர்களுக்கான அறிவுபூர்வமான விழிப்புணர்வு திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வுக்கு முப்படை,பொலிஸார் மற்றும் பொதுமக்கள் உட்பட 251 பேர் பங்கேற்றனர்.

இந்தக் கருத்தரங்கிற்கு 22ஆவது படைப் பிரிவுத் தளபதியான மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகரவின் அழைப்பையேற்று தியதலாவை இராணுவ எகடமியின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் பிரியந்த சேனாரத்ன,மின்னேரிய காலாட்படை பயிற்சி நிலையத்தின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் ஜே.எம்.எஸ்.ஜி.பீ ஜயமஹா இந்த விரிவுரைகளை வழங்கினார்கள். இறுதியில் இந்த விரிவுரைகளை வழங்கிய விரிவுரையாளர்களுக்கு 222 படைத் தலைமையகத்தினால் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது.

|