யாழ்ப்பாணத்தில் முப்படையினருக்கான டெங்கு விழிப்புணர்வு திட்டம்
31st August 2017
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த முப்படையினருக்கு டெங்கு விழிப்ப்புணர்வு செயலமர்வு இம்மாதம் 24ஆம் திகதி இடம்பெற்றது.
இந்த விழிப்புணர்வை யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியின் தலைமையில் யாழ் பாதுகாப்பு தலைமையக கேட்போர் கூடத்தில் முப்படையினரது பங்களிப்புடன் இடம்பெற்றது.
இந்த கருத்தரங்கில் எவ்வாறு டெங்கை முற்றாக ஒழிப்பது தொடர்பான செயற்திட்டத்தை விரிவுபடுத்தி விளக்கினர். இந்த விரிவுரைகளை டொக்டர் பிரசில்லா சமரவீர மற்றும் சுகாதார துறையின் பிரசித்திபெற்ற அதிகாரியான திருமதி சதுந்தலா ஜானகி அவர்கள் ஆற்றினார்கள். இந்த செயலமர்விற்கு முப்படையைச் சேர்ந்த 200 படை வீரர்கள் கலந்து கொண்டனர்.
|