பிலிப்பைன்ஸ் சிரேஷ்ட பாதுகாப்பு இராணுவ அதிகாரி இராணுவ தளபதியை சந்திப்பு

28th August 2017

பிலிப்பைன்ஸ் சிரேஷ்ட பாதுகாப்பு இராணுவ அதிகாரியான ரேமுன்டோ எகோர்டா 2017ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு கருத்தரங்கிற்கு விஜயத்தை மேற்கொண்ட இக்காலகட்டத்தில் இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை (28)ஆம் திகதி பண்டாரநாயக சர்வதேச ஞாகபார்த்த மகாநாட்டு மண்டபத்தின் விஷேட பிரமுகர்கள் சாலையில் சந்தித்து கலந்துரையாடல் நிகழ்த்தினார்.

இவ்விருவரது சந்திப்பின் போது பாதுகாப்பு முக்கிய விடயம் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. பிலிப்பைன்ஸ் சிரேஷ்ட பாதுகாப்பு இராணுவ அதிகாரி இலங்கை இராணுவ தளபதிக்கு கருத்தரங்கு தொடர்பாக வாழ்த்துக்களைதெரிவித்தார். பின்பு இராணுவ தளபதியினால் இந்த கருத்தரங்கிற்கு வருகை தந்ததையிட்டு தனது மனப்பூர்வமான வாழ்த்துக்ளை இந்த அதிகாரிக்குதெரிவித்தார்.

|