சீன உயர் கேர்ணல் அவர்களின் உரை

28th August 2017

கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கின் முதல் அங்கம் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் அமல் ஜயவர்தன அவர்களினால் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் (28) திங்கட் கிழமை இடம் பெற்றது.

இதன் போது சீன பீஜிங் பாதுகாப்பு பல்கலைக் கழகத்தின் பிரதி கட்டளைத் தளபதி குவே சிங்குவிங்,கணடா அச்சுருத்தல் மற்றும் அபாய நிலையத்தின் தலைவரான பிஹில் குருஸ்கி மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு பல்கலைக் கழகத்தின் மீள் விரிவுரையாளர் மொகமட் அபாஸ் ஹசன் போன்றோர் தமது பேச்சினை நிறைவு செய்தவுடன் சீன பீஜிங் பாதுகாப்பு பல்கலைக் கழகத்தின் பிரதி கட்டளைத் தளபதி குவே சிங்குவிங் தமது கருத்தினை மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் வன்முறைகள் உலகலாவிய ரீதியில் இடம் பெறுகின்றதென்றும் அமெரிக்காவினரால் பாதுகாப்பு ,மனித உரிமைகள் சமாதானம் போன்ற விடயங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறியதுடன் அவை நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படைக் கருவியாக காணப்படுகின்றதும் என்றார்.

அந்த வகையில் கிழக்கு ஆசியாவில் வன்முறைச் செயற்பாடுகளின் தாக்கம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் 21ஆம் நுாற்றாண்டு காலப் பகுதியில் சர்வதேச ரீதியில் பயங்கரவாதம் மற்றும் வன்முறை தலைதுாக்கி உள்ளது.

அதேபோன்று உலகலாவிய ரீதியில் இவ் வன்முறை என்பது நாடுகளிற்கு மத்தியில் மற்றும் மதங்களிற்கிடையே ஏற்பட்ட வண்ணமே உள்ளது.

அதேபோன்று ஜனவரி மாதம் 2016ஆம் ஆண்டில் ஐக்கிய நாட்டின் செயலாளரான கீ மூன் அவர்கள் வன்முறைகள் தொடர்பாக விபரித்துக் கூறினார்.

இருப்பினும் இன்றும் கூட இவ் வன்முறைகள் தலைதுாக்கி உள்ளதுடன் வெவ்வேறு நாடுகளிற்கிடையே இவை பாரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் இவற்றை கட்டுப்படுத்துவது கடின செயற்பாடாகக் காணப்படுகின்றது என்றார்.

மேலும் கிழக்கு ஆசியாவில் 1984 ஆயூம் சிரிங்கியோ எனும் பிரிவினவாதிகள் ஜப்பானியர்களின் அனுசரையுடன் இக் குழுக்கள் உருவாக்கப்பட்டு வந்தது. மேலும் இவ் அமைப்பானது 9000 இற்கும் மேற்பட்ட ஜப்பானிய உறுப்பினர்களை மற்றம் 40 000 வெளிநாட்டு பங்கேற்பாளர்களைக் கொண்டு காணப்பட்டது. மேலும் இக் குழுவினர் குற்றவியல் செயற்பாடுகள் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளை மேற்கொள்பவர்களாகக் காணப்பட்டனர்.

அதேபோன்று 20ஆம் திகதி மார்ச் மாதம் 1955ஆம் ஆண்டு இக் குழுவினர் டோக்கியோ நகரில் ஐந்து புகையிரதங்களை இலங்கு வைத்து தாக்குதல் நடத்தினர். இதில் 13பேர் மரணித்ததுடன் ,அவசர சிகிச்சைப் பிரிவில் 54நபர்கள் சேர்க்கப்பட்டதோடு 980ற்கும் மேற்பட்ட நபர்கள் அதிதீவிரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

அதேபோன்று இவர் முக்கியமாகக் நாடுகளிற்கிடையே தொடர்பாடல் மற்றும் நம்பகத்தன்மை காணப்படல் வேண்டுமென அழுத்தமாக சுட்டிக்காட்டினார்.

இவற்றை நாம் மேம்படுத்திக் கொண்டால் எதிர் காலத்தில் சமாதானத்தை நிலைநாட்ட முடியுமெனக் கூறினார்.

|