தேசிய பாதுகாப்பு பல்கலைக் கழகத்தின் மீள் ஆய்வாளர் உரை

28th August 2017

பாகிஸ்தான் தலைநகரமான இஸ்லாமதபாத்தின் தேசிய பாதுகாப்பு பல்கலைக் கழகத்தின் மீள் ஆய்வாளரான மொகமட் அப்பாஸ் ஹசன் அவர்கள் சவால்கள் மற்றும் முரண்பாடுகள் தேசிய முன்னோக்குகள் - மேற்கு ஆசியா எனும் தலைப்பின் கீழ் வன்முறை தொடர்பாக தமது கருத்தை தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் மக்கள் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் மேற்கு ஆசிய நாடுகளிள் எண்ணெய் மற்றும் வாயு போன்ற வழங்கள் காணப்பட்டாலும் வன்முறைகள் இடம் பெற்ற வண்ணமே உள்ளன. அந்த வகையில் சிரியா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் , ஈராக்கின் சிவில் யுத்தம் மற்றும் ஐஎஸ்ஐஎஸ், சவூதி- ஈரான் போராட்டம் , சவுதி – யேமன் போராட்டம் , துருக்கியின் அமைதியின்மை , இஸ்ராயேல் - பலஸ்தீன போராட்டம் மற்றும் கட்டார் பஹரேன் போராட்டம் போன்றவற்றை நாம் சிறந்த உதாரணங்களாக கருதலாம்.

இதன் காரணமாக இந் நாடுகளில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளமையை காணக்கூடியதாகவுள்ளதுடன் தஞ்சமடைவோரின் நிலையும் அதிகரித்துக் காணப்படுகின்றது.

அதேபோன்று தெற்கு ஆசியாவில் ரஷ்யா – துருக்கி போன்ற நாடுகளிற்கிடையே காலநிலை மாற்றம் போன்றன எண்ணெய் கழிவுகள் போன்ற செயற்பாடுகளினால் ஏற்பட்ட வண்ணம் காணப்படுகின்றது என தமது கருத்தை தெரிவித்துள்ளார்.

|