கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கில் கருத்து தெரிவித்த ஐக்கிய அமெரிக்க துாதரகத்தின் உயர் ஸ்தானிகர்
28th August 2017
இலங்கை இராணுவத்தின் தலைமையில் 2017ஆம் ஆண்டிற்கான கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கான 34 நாடுகளை உள்ளடங்கும் முகமாக திங்கட் கிழமை (28) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
இக் கருத்தரங்கில் இலங்கை இராணுவத்தினரின் அழைப்பை ஏற்று ஐக்கிய அமெரிக்காவின் ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியான அட்மிரால் வில்லியம் ஜே பாலோன் கலந்து கொண்டு உறையாற்றினார்.
மேலும் இது தொடர்பாக கருத்து தெரிவித்த அட்மிரால் பாலோன் அவர்கள் வன்முறை என்பது இன்றும் நாளையும் காணப்படுகின்ற ஓர் விடயமாகக் காணப்படுகின்றது. அந்த வகையில் உலகலாவிய ரீதியில் வன்முறைகள் என்பதற்கு சிறந்த ஓர் உதாரணமாக இந் நாடு விளங்குகின்றது. அந்த வகையில் வன்முறை எனும் போது பொது மக்கள் தமது பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் செயல்படுகின்றனர். அதேபோன்று இங்கு கலந்து கொண்ட பார்வையாளர்களாகிய உங்களுக்கும் இவ் வன்முறை தொடர்பாக அனுபவம் இருக்கும் என நான் நம்புகிறேன். அந்த வகையில் நான் பெண்டகன் போராட்டத்தில் 9 /11 வரையான காலப்பகுதியில் பங்கேற்றேன்.
அதே போன்று இவ் வன்முறைகள் சமூக மற்றும் சமயம் தொடர்பாக காணப்படுகின்றது. எதிர் காலங்களில் இவை வெவ்வேறு முறைகளிலும்,ஏற்படக் கூடும். இவை பொதுவாக எங்களுடைய பிரச்சினையாக காணப்படுகின்றது. மாறாக தனி நபரினது பிரச்சினையல்ல. அந்த வகையில் அரசாங்கம் இது தொடர்பாக கவணத்தைச் செலுத்தல் அவசியமானதுடன் இதற்கான தீர்வாக பாதுகாப்பு சேவைகள் முக்கியம் வகிக்கின்றது.
அந்த வகையில் பல இலட்சக் கணக்கானவர்கள் தமது நாட்டில் இடம் பெறுகின்ற வன்முறைகளை ஏற்பதில்லை. அந்த வகையில் இராணுவ நடவடிக்கைகளின் போது சைபர் தாக்குதல்கள் பங்களிக்கின்றது. உலகலாவிய ரீதியில் பரந்து காணப்படும் வன்முறைகளுக்கு சமாதானம் எனும் விடயம் சிறந்த ஓர் எடுத்துக்காட்டாக காணப்படுகின்றது மேலும் அனைத்து அரசாங்க மற்றும் அமைப்புகளும் தொடர்பாடல் ஒருங்கிணைப்பை மேற்கொள்ளல் வேண்டும். அந்த வகையில் சில சுயநலப் போக்குகளும் பாதுகாப்பு படையினர்களுக்கும் அமைப்புகளுக்கும் பாரிய சவாலாக அமைகின்றது என்றார்.
|