இராணுவத்தினரால் பொது மக்களுக்கான டெங்கு ஒழிப்புத் திட்ட செயலமர்வு
25th August 2017
நாட்டில் வெவ்வேறு பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள டெங்கு நோய் எச்சரிக்கை தொடர்பாக புரிந்துணர்வதற்காக பொது மக்கள்,பொலிஸ் உத்தியோகத்தர்கள்,படையினர் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர்களின் நலன்புரி நிமித்தம் கடந்த (22)ஆம் திகதி செவ்வாய்க் கிழமை 22ஆவது படைப் பிரிவின் கீழியங்கும் படைத் தலைமைய ஒத்துழைப்புடன் இடம்பெற்றது.
22ஆவது படைப் பிரிவினால் இந்த தௌிவு படுத்தும் கருத்தரங்கு மாவட்ட செயலாளர் தொடர்பாடலுடன் திருக்கோணமலை மாவட்ட செயலகத்தில் (22)ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெற்றது.
இந்த செயலமர்வு மூலம் மக்களுக்கு விளிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் 22ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவின் தலைமையில் இடம் பெற்றது. இந்த செயலமர்வின் போது உப்புவெலி மக்கள் சுகாதார பரிசோதகர் டி. இந்திராமணி டெங்கு தொடர்பான விரிவுரை நிகழ்த்தினார்.
இந்த செயலமர்விற்கு பங்கு பற்றிய விரிவுரையாளர்களுக்கு 222ஆவது படைத் தலைமையகத்தினால் அவர்களது சேவையை பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
|