இராணுவத்தினரின் ஸ்போட்ஸ்டெக்ஸ் கண்காட்சி
24th August 2017
இராணுவத் தளபதியவர்களின் ஆலோசனைக்கமைய இராணுவ விளையாட்டு பணியகத்தின் பணிப்பாளர் அவர்களின் தலைமையில் 2017ஆம் ஆண்டிற்கான ஸ்போட்ஸ்டெக்ஸ் எனும் தலைப்பின் கீழ் அமைகின்ற இக் கண்காட்சியானது எதிர் வரும் ஆகஸ்ட் 26 – 27ஆம் திகதிகளில் பண்டாரநாயக்க சர்வதேச நினைவு மாநாட்டு மண்டபத்தில் இடம் பெறும்.
அந்த வகையில் இராணுவ விளையாட்டு பணியகத்தின் பணிப்பாளரான பிரிகேடியர் ஆனுர சுதசிங்க அவர்களின் கண்காணிப்பின் கீழ் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் தொழில்நுட்பங்கள் உள்ளடங்களாக இக் கண்காட்சி விளங்குகிறது.
மேலும் இக் கண்காட்டியானது இலங்கையில் மிகப் பாரிய அளவில் நடாத்தப்படுவதுடன் ஆரோக்கியமான வாழ்விற்கு உடற்ப் பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி விளக்கும் முகமாக அமைகிறது.
இக் கண்காட்சியாது எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (27) வரை காட்சிப் படுத்தப்படும்.
|