5ஆவது வருடாந்த சிவில் தொடர்பாடல் கருத்தரங்கு நிறைவு
24th August 2017
தென் ஆசிய 2017ஆம் ஆண்டிற்கான சிவில் தொடர்பாடல் முன்னோடிக் கருத்தரங்கு 10நாட்கள் முடிவினைத் தொடர்ந்து 5ஆவது தடவையாக கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் சில தினங்களுக்கு முன்னர் நடாத்தப்பட்டது.
அந்த வகையில் இராணுவ உளவியல் நடவடிக்கை பணியகம் மற்றும் அமெரிக்க துாதரகம் இணைந்து நாடாத்தப்பட்ட இக் கருத்தரங்கானது முப்படைக்குமான சிவில் தொடர்பாடல் விடயம் தொடர்பாக விளக்கப்பட்டதோடு ஆசியாவின் முப்படையையும் சேர்ந்த பங்களாதேஸ் ,கொப்போடியா ,இந்தியா ,இந்தோநேசியா ,மொங்கோலியா ,நேபாளம் ,பிலிப்பைன்ஸ் ,இலங்கை மற்றும் மாலைதீவு போன்ற நாடுகளை உள்ளடக்கிய நாடுகளின் 30 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அதேபோன்று இக் கருத்தரங்கின் ஆரம்பத்தை இலங்கை மற்றும் மாலைதீவு துாதரகங்களின் துாதுவர் அதுள் கெஷாப் அவர்கள் ஆரம்பித்து வைத்ததுடன் இந் நிகழ்வின் முடிவுரை இராணுவ பதவி நிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
அத்துடன் 30 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் , 40 இராணுவ அதிகாரிகள் , 3 விமானப்படை அதிகாரிகள் , 3 கடற்படை அதிகாரிகள் போன்ரோரும் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து இக் கருத்தரங்கானது மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள போன்றவற்றின் மூலம் சிறந்த சிவில் தொடர்பாடல் ஒருங்கினைப்பை உருவாக்கும் முகமாக அமைகிறது.
இக் கருத்தரங்கின் இறுதியில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அவர்களால் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் முப் படையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் அமெரிக்க துாதரகத்தின் பிரதானிகள் போன்ரோரும் கலந்து கொண்டனர்.
|