பாலர் பாடசாலை மாணவர்கள் பலாலி விமான நிலையத்தை பார்வையிட்டனர்
15th August 2017
கரவெட்டி குழந்தை யேசு பாலர் பாடசாலையின் பொறுப்பாசிரியரான அருட் சகோதரி எம் புஷ்பமாலா அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க காங்கேசன் துரையில் அமைந்துள்ள பலாலி விமான நிலையத்தை பார்வையிட யாழ்ப்பான பாதுகாப்பு படைத் தலைமையகம் தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளது.
அந்த வகையில் யாழ்ப்பான பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷ்ன ஹெட்டியாராச்சியவர்களின் ஒருங்கினைப்போடு இப் பாடசாலையைச் சேர்ந்த 5 ஆசிரியர்கள் , 48 பாலர் பாடசாலை சிறார்கள் மற்றும் இச் சிறார்களின் பெற்ரோர்களான 48பேரிற்கு இவ் விமான நிலையத்தை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டதோடு முப்படையினரும் தமது ஒத்துழைப்பை வழங்கினர்.
மேலும் கடந்த வெள்ளிக் கிழமை (15) கல்விச் சுற்றுலாவை மேற்கொண்ட இவர்கள் முதல் தடமையாக விமான நிலையத்தை பார்வையிட முடிந்ததை கருதி மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.
|