683ஆவது படைத் தலைமையகத்தின் வருடாந்த நினைவு தின விழா
14th August 2017
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 683ஆவது படைத் தலைமையகத்தின் 8ஆவது நினைவு தின விழா ஜூலை மாதம் (08)ஆம் திகதி சமய அனுஷ்டானங்களுடன் இடம்பெற்றது.
இந்த நினைவு தினத்தையிட்டு படைத் தலைமையக வளாகத்தினுள் உள்ள விகாரையில் நாட்டிற்காக உயிர் நீத்த படை வீரர்களை நினைவு படுத்தும் முகமாக பௌத்த சமய வழிபாடுகள் இடம்பெற்றது.
இந்த நிகழ்வினையிட்டு 683ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் எச்.கே.ஏ.சீ.ஆர் கொடிதுவக்கு அவர்களுக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்பு கட்டளை அதிகாரியனால் படையினர்களுக்கு உறை நிகழ்த்தப்பட்டு தலைமையக வளாகத்தினுள் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது. இறுதியில் கட்டளை அதிகாரி இராணுவத்தினரது பிரியாவிடையில் கலந்து கொண்டார்.
|