இராணுவ பயிற்றுவிப்பு தலைமையகத்தின் தளபதியாக புதிய இராணுவ அதிகாரி நியமனம்

4th August 2017

இராணுவ பயிற்றுவிப்பு தலைமையகத்தின்த ளபதியாக மேஜர் ஜெனரல் தனன்ஜித் கருணாரத்தின அவர்கள் கடந்த செவ்வாயக் கிழமை (1) கடமைப் பொறுப்பேற்றார்.

இராணுவ தியத்தலாவை பயிற்றுவிப்பு தலைமையகத்தில் இடம் பெற்ற இந் நிகழ்வில் இப் பயிற்றுவிப்பு தலைமையகத்தின் தளபதியான பிரிகேடியர் நத்தன ஹதுருசிங்க அவர்களால் வரவேற்கப்பட்டு இராணுவ அணிவகுப்பு மரியாதையும் நிகழ்த்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இராணுவ விதிமுறைகளுக்கமைவாகவும் பௌத்த மத அனுஷ்டானங்களுக்கமைவாக இத் தலைமையகத்தின் புதிய தளபதியவர்கள் தமது கடமைப் பொறுப்பை ஏற்றார்.

இந் நிகழ்வின் இறுதியில் இத் தலைமையத்தினை பார்வையிட்ட புதிய இராணுவ பயிற்றுவிப்பு தளபதியவர்களால் இராணுவ அதிகாரிகள் மற்றும் படை வீரர்களுடனான விருந்துபசார நிகழ்விலும் கலந்து கொண்டார்.

|