அமெரிக்க துாதரகத்தின் பிரதி நடவடிக்கை பிரதானி மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தளபதியை சந்திப்பு

3rd August 2017

இலங்கைக்கான அமெரிக்க துாதரகத்தின் பிரதி நடவடிக்கை பிரதானி ரொபட் ஹில்டன் அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின்போது (31)ஆம் திகதி யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியை அவரது தலைமையகத்தில் சந்தித்தார்.

இருவருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது யாழ்ப்பாண குடாநாட்டில் இராணுவத்தினர் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள சமாதான நல்லினக்கம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இறுதியில் இருவருக்கும் இடையில் நினைவு சின்னங்கள் பரிமாறப்பட்டது.

அன்றைய தினத்திலே இலங்கைக்கான அமெரிக்க துாதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் டக்ளஸ் ஹேஷ் பாதுகாப்பு படைத் தளபதியை தலைமையகத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது இருவருக்கும் இடையில் யாழ்ப்பாண தற்போதைய நிலைமை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இறுதியில் இருவருக்கும் இடையில் நினைவு சின்னங்கள் பரிமாறப்பட்டது.

|