மல்லாவி அரச வைத்தியசாலையில் இராணுவத்தினர் சிரமதான பணிகளில்

1st August 2017

மல்லாவி தள வைத்தியசாலையின் பிரதான வைத்திய அதிகாரியான டொக்டர் கந்தசாமி சுசிந்திரன் அவர்களால் கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 65 படைப் பிரிவிற்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய 65ஆவது படைப் பிரிவில் உள்ள இராணுவத்தினர் 500 பேர் , 300 பொதுமக்கள், வைத்திய ஊழியர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளது பங்களிப்புடன் ஒரு நாள் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மல்லாவி பிரதான வைத்திய அதிகாரியினால் 65ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சரத்வீரவர்தன அவர்களுக்கு டெங்கு ஒழிப்பு திட்டத்தின் நிமித்தம் இந்த சிரமதான பணிகளை மேற்கொள்வதற்காக வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

மல்லாவி தள வைத்தியசாலை 20 ஏக்கர் பரப்பில் பற்றைகள் மற்றும் காடு சூழ்ந்த பிரதேசமாக அமைந்துள்ளது. இந்த வைத்தியசாலைக்கு நாளுக்கு 100 நோயாளர்கள் சிகிச்சை பெறுவதற்கு வருகிறார்கள். ஆகையால் இந்த காட்டு பற்றைகள் மூலம் டெங்கு நோய்க்கு இந்த நோயாளர்கள் பாதிக்ககூடிய வாய்ப்புள்ளது. அதை கருத்தில் கொண்டு இந்த பிரதான வைத்திய அதிகாரியினால் இந்த ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் பிரதான வைத்திய அதிகாரியினால் இராணுவத்தினர் புரிந்த சேவையை பாராட்டி 65ஆவது படைப் பிரிவிற்கு கடிதம் மூலம் நன்றியை தெரிவித்தார்.

இராணுவத்தினரால் 150 பூச்சாடிகள் வைத்தியசாலை வளாக அலங்காரத்தின் நிமித்தம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

|