நொச்சியாகம பிரதேசவாசிகளுக்கு இலவச மூக்கு கண்ணாடிகள்
1st August 2017
சாலியவெவ இராணுவ தொழில் சார்ந்த பயிற்சி மத்திய நிலையத்தின் ஒழுங்கில் அப்பிரதேச வறிய மக்களுக்கு மூக்கு கண்ணாடிகள் இலவசமாக வழங்கும் நிகழ்வு 27ஆம் திகதி நொச்சியாகம தலகஸவெவ வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
பிரிகேடியர் ரந்துல ஹத்னாஹொட அவர்களினால் வைத்தியர் நிமல் வீரகோனிற்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய அப்பிரதேசத்தைச் சேர்ந்த வறிய குடும்பத்தவர்கள் 400 பேருக்கு கண்டி தனியார் ஒப்டிகலஸ் நிறுவனத்தினால் இந்த அன்பளிப்புகள் செய்யப்பட்டன.
இந்த நிகழ்விற்கு பிரிகேடியர் ரன்துல ஹத்னாஹொட, தலகஸ்வெவ பாடசாலையின் அதிபர், இப் பிரதேசத்தைச் சேர்ந்த கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
|