புதிய வன்னி பாதுகாப்பு படைத் தளபதி பதவியேற்றார்

31st July 2017

மேஜர் ஜெனரல் குமுது பெரேரா புதிய வன்னி பாதுகாப்பு படைத் தளபதியாக (28)ஆம் திகதி வெள்ளிக் கிழமை உத்தியோகபூர்வமாக தனது கடமையை பொறுப்பேற்றார். இவர் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு வருகை தரும்போது பொது நிர்வாக பிரதானி பிரிகேடியர் எச்.பி.என்.கே ஜய பதிரன இவரை வரவேற்று இராணுவ அணிவகுப்பு மரியாதையையும் வழங்கினார். அதன் பின்பு படைத் தளபதி பௌத்த,கிறிஸ்தவ மத வழிபாடுகளுடன் உத்தியோக பூர்வமாக தனது பதவியை கையொப்பமிட்டு பொறுப்பேற்றார். பின்பு முகாம் வளாகத்தினுள் படைத் தளபதியினால் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது.

இவர் வன்னி பாதுகாப்பு தலைமையகத்திற்கு படைத் தளபதியாக நியமிப்பதற்கு முன்பு மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க அவர்கள் வன்னி பாதுகாப்பு படைத் தளபதியாக பதவி வகித்தார். பின்பு இவர் சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிநிலை கல்லுாரியில் கட்டளை அதிகாரியாக ஜூலை மாதம் 27ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.

|