புதிய மத்திய பாதுகாப்பு படைத் தளபதி பதிவியேற்றார்

31st July 2017

புதிய எட்டாவது மத்திய பாதுகாப்பு படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் (30)ஆம் திகதி உத்தியோக பூர்வமாக பௌத்த சமய வழிபாடுகளுடன் தனது கடமையை பொறுப்பேற்றார்.

புதிய பாதுகாப்பு படைத் தளபதிக்கு 18ஆவது கெமுனு ஹேவா படையணியினால் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து படைத் தளபதிக்கு தேநீர் பிரியாவிடை நிகழ்வு படைத் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்விற்கு 11, 12ஆவது படைப் பிரிவின் படைத் தளபதிகள், 111, 112 மற்றும் 121 படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

|