டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு இராணுவத்தின் ஒத்துழைப்பு
29th July 2017
ஜனாதிபதி அலுவலகத்தின் டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு சமமாக பாதுகாப்பு அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு இணைந்து ஆரம்பிக்கப்பட்ட டெங்கு ஒழிப்புத் திட்ட நிகழ்ச்சி பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள், காரியாலய அங்கத்தவர்கள்,பெற்றோர்கள் மற்றும் 700க்கு அதிகமான படையினர்களின் ஒத்துழைப்புடன் (28)ஆம் திகதி வெள்ளிக் கிழமை காலை ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி திட்டத்தில் பாடசாலை சூழல்,பொது இடங்கள்,டெங்கு நுளம்புகள் பெருகுவதற்குரிய இடங்கள் கண்டு பிடித்து சுத்தப்படுத்தல் பிரதான நோக்கமாக அமைகிறது.
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களது வழிக்காட்டலின் கீழ் அனைத்து பாதுகாப்பு படைத் தலைமையகங்களில் உள்ள இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் இந்த ஒழிப்புத் திட்டங்கள் இடம்பெற்றது.
இந்த நிகழ்ச்சி திட்டங்கள் நாடுபூராக (30)ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை வரை இடம்பெறும்.
|