இலங்கை மின்சாரம் மற்றும் பொறியியல் இயந்திர படையணியில் புதிய கேர்ணல் கட்டளை அதிகாரி நியமிப்பு
28th July 2017
பிரிகேடியர் துமிந்த சிரிநாக அவர்கள் கொழும்பு 2இல் அமைந்துள்ள மின்சாரம் மற்றும் பொறியியல் இயந்திர படையணியின் தலைமை அலுவலகத்தில் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இலங்கை மின்சாரம் மற்றும் பொறியியல் இயந்திர படைத்தலைமையகத்துக்கு வருகை தந்த புதிய கேர்ணல் பிரிகேடியர் துமிந்த சிரிநாக அவர்களை படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதியினால் வரவேற்கப்பட்டார்.
மேலும் புதிய தளபதியை வரவேற்கும் முகமாக இராணுவ மின்சாரம் மற்றும் பொறியியல் இயந்திர படையணியினரால் காவலர் விருதும் அணிவகுப்பு மரியாதையும் நிகழ்த்தப்பட்டது.இதனை தொடர்ந்து உத்தியோக பூர்வமாக கையொப்பம்மிட்டு கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
மேலும் அனைத்து கட்டளை அதிகாரிகளும் தேநீர் உபசாரத்திலும் கலந்து கொண்டனர்.
|