அம்பாறை போர் பயிற்சி பாடசாலையில் பயிற்சி நிறைவுபெற்ற படைவீரர்களின் வெளியேறும் நிகழ்வு

27th July 2017

அம்பாறை பயிற்சி முகாமில் 79 ஆண்,பெண் கனிஷ்ட பயிற்றுவிப்பாளர்களின் நிறைவு விழா பயிற்சி பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த பயிற்சி நிறைவு நிகழ்விற்கு பிரதம அதிதியாக போர் பயிற்சி பாடசாலையின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக கலந்து கொண்டுள்ளதுடன் பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.

பயிற்சி இலக்கம் (86)கீழ் ஆண் கனிஷ்ட பயிற்சியாளர்கள் 73 பேரும்,பயிற்சி இலக்கம் (36)கீழ் பெண் கனிஷ்ட பயிற்சியாளர்கள் 06 பேரும்,இந்த பயிற்சியை நிறைவு செய்தனர்.

ஆண்களுக்கான பயிற்சிகளில் முதலாவது,இரண்டாவது,மூன்றாவது இடத்தை கோப்ரல் ஜே.ஜி.யூ.வயி குணதிலக,கோப்ரல் எம்.எம். அமரதாஸ மற்றும் பொம்படியர் குணரத்ன பெற்றுக்கொண்டனர்.

பெண்களுக்கான பயிற்சிகளில் முதலாவது,இரண்டாவது,மூன்றாவது இடத்தை கோப்ரல் வயி.ஏ.ஐ.டப்ள்யூ ரணசிங்க,லான்ஸ் கோப்ரல் ஜி.எல் கல்யாணி,லான்ஸ் கோப்ரல் ஜே.ஜே.ஜி ரத்னலதா பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்விற்கு பிரதான விரிவுரையாளர்கள்,சிரேஷ்ட விரிவுரையாளர்கள்,சிரேஸ்ட உத்தியோகத்தர்கள்,பயிற்சி முகாமைச் சேர்ந்த படைவீரர்கள் கலந்து கொண்டனர்.

|