22ஆவது படைப் பிரிவினால் திருகோணமலையில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வு

27th July 2017

கிழக்கு பாதுகாப்புபடைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 22ஆவது படைப் பிரிவின் தலைமையில் திருகோணமலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அவசர காலகட்டங்களில் ஏற்படும் அனர்த்த பேரழிவுகளுக்கு முகம் கொடுப்பது தொடர்பான கருத்தரங்கு (25)ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெற்றது.

இராணுவம், கடற்படை,விமானப்படை,பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர்கள்,அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள்,கரையோர பாதுகாப்பு அதிகாரிகள்,சமூக சேவை அதிகாரிகள், அரச அதிகாரிகளின் பங்களிப்புடன் 22ஆவது படைப் பிரிவினால் இந்த ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன.

திருகோணமலை மாவட்டத்தில் எந்த தற்செயல்களை சந்திக்க முன் தயார்நிலை முக்கியதுவம் வெள்ளம் மற்றும் வறட்சி அவசர நடைமுறைகள் தொடர்பான கருத்தரங்குகள் இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் கே. சுகுனதாஸ,பிரதி அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எஸ் நுவன்பிரியதர்ஷன,மட்டக்களப்பு மாவட்ட வானியல் அதிகாரி பி.சி.எஸ் அநுரசிறி,சேருநுவர பிரதேச செயலாளர் எஸ். ஜயரத்ன, 22ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்கள் இந்த கருத்தரங்குகளில் கலந்து கொண்டனர்.

முப்படையினர் இந்த அனர்த்தங்களின் போது எவ்வாறு முகங்கொடுப்பது தொடர்பாகவும் முப்படையினர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் இணைந்து இந்த பேரழிவுகளின் போது செய்ற்பட வேண்டும் என்று 22ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி இந் நிகழ்வில் உறையாற்றினார். இறுதியில் படைத் தளபதியினால் இந்த கருத்தரங்கிற்கு வருகை தந்த அதிகாரிகளுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.

|