542 படைத் தலைமையகத்தினால் இரத்ததானம் நிகழ்வு

25th July 2017

மன்னார் மாவட்ட முருங்கன் பிரதேச வைத்தியசாலையில் இராணுவத்தின் 542 படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக் கிழமை (23)ஆம் திகதி இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.

மன்னார் வைத்தியசாலையின் கோரிக்கைக்கு அமைவாக இராணுவத்தின் 542 படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் என்.பி அகுரன்திலக அவர்களின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது இராணுவத்தின் 542 படைத் தலைமையகத்திற்கு கீழ் உள்ள மாந்தை,மன்னார் இராணுவ முகாமைச் சேர்ந்த 136 இராணுவ வீரர்கள் இரத்ததானம் செய்துள்ளனர்.

நிகழ்வின் முருங்கன் பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் மற்றும் இராணுவத்தின் 542ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

|