பரா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தை பெற்றவருக்கு வரவேற்பு
25th July 2017
ஓய்வு பெற்ற மூன்றாவது கஜபா படையணியைச் சேர்ந்த சாஜன்ட் தினேஷ் பிரியந்த ஹேரத் லண்டனில் நடைபெற்ற 2017 ஆம் ஆண்டு பரா ஒலிம்பிக் ஆண்களுக்கான ஈட்டியெறிதல் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.
இவர் 26ஆம் திகதி மீண்டும் இலங்கைக்கு திரும்பினார். இவரை பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இராணுவ விளையாட்டு பணிப்பாளர் பிரிகேடியர் அநுர சுதசிங்க மற்றும் இராணுவ உயரதிகாரிகள் வரவேற்றனர். அத்துடன் இவரை கஜபா படையணியின் கலாச்சார பேண்ட வாத்திய குழுவினர் மேள தாளங்களுடன் விமான நிலைய நுழைவாயிலில் வைத்து வரவேற்றனர்.
இலங்கைக்கு மூன்றாவது தடவையாக இந்த வெள்ளிப் பதக்கம் கிடைக்கப்பெற்றுள்ளது. 2012ஆம் ஆண்டு கோப்ரல் பிரதீப் சஞ்ஜய மற்றும் 2016ஆம் ஆண்டு கோப்ரல் பிரியந்தவும் பதக்கத்தை பெற்று எமது நாட்டிற்கு பெருமையை சேர்த்து தந்துள்ளனர்.
|